17 Oct 2026
ஆசிரியர் பக்கம்

உளவியலே உணவு

பகிரவும் WhatsApp
உளவியலே உணவு
அகிலாண்டேஸ்வரி கி
செய்தியாளர்
13 Sep 2026
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
உளவியலே உணவு!
உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, மனதிற்கும் அதே அளவு ஊட்டம் தேவை
"உணவே மருந்து" என்ற பழமொழி நமக்கெல்லாம் பரிச்சயமானது. ஆனால், மனதிற்கும் ஒரு மருந்து தேவைப்படுகிறது? நிம்மதியாகத் தேவை. அதுதான் 'உளவியல்'. உடலுக்கு நல்ல உணவு ஆரோக்கியத்தை அளிப்பதுபோல், மனதிற்கு நல்ல சிந்தனைகளும், சரியான அணுகுமுறைகளும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதனால்தான் இந்தத் தொடருக்கு "உளவியலே உணவு" என்று பெயரிட்டுள்ளோம்.
நம் முன்னோர்கள் சிறுசிறு உடல் பிரச்சினைகளை உணவுப் பழக்கத்தால் சரிசெய்யலாம் என்று கூறியுள்ளனர். அதுபோலவே, வாழ்க்கைப் பயணத்தில் மனதில் ஏற்படும் சிறுசிறு காயங்களையும், உணர்ச்சிக் குழப்பங்களையும் சரியான உளவியல் புரிதலின் மூலம் குணப்படுத்த முடியும். அந்தப் பயணத்தை இனி நாம் ஒன்றாகத் தொடங்கலாம்.
உளவியலில் Wild Horse Theory என்ற ஒரு சுவாரஸ்யமான கோட்பாடு உள்ளது. ஒரு நாள் இரவு, ரத்தத்தை உறிஞ்சும் வௌவால்கள் ஒரு குதிரையை கடிந்து மிகக் குறைந்த அளவு ரத்தத்தை உறிஞ்சின. அந்தக் கடி குதிரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், அந்த அனுபவத்தால் பயந்துபோன குதிரை இரவு முழுவதும் கட்டுப்பாடின்றி காட்டில் ஓடிக்கொண்டே இருந்தது. மறுநாள் காலை, சோர்வால் தரையில் விழுந்து உயிரிழந்தது.
அந்தக் குதிரையின் மரணத்திற்கு காரணம் வௌவாலின் கடி அல்ல; அந்தக் கடியைப் பற்றிய பயமும், கட்டுப்பாடற்ற மன ஓட்டமும்தான்.
இதைக் கவனிக்கும் நம் வாழ்க்கைக் கும் மிகப் பெரிய தொடர்பு இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வீட்டிலும், வேலை இடத்திலும், சமூகத்திலும் பல சிறிய சிக்கல்கள் நம்மைத் தொடுகின்றன. வீட்டில் ஏற்படும் சிறுசிறு மனஸ்தாபங்கள், அலுவலக அழுத்தம், போக்குவரத்து நெரிசல், அன்றாட எரிச்சல்களையெல்லாம் அனைத்தும் வௌவாலின் சிறிய கடியைப் போன்றவை.
ஆனால், அந்தச் சிறிய நிகழ்வுகளுக்குக் காட்டும் நமது எதிர்வினைகளால்தான் பெரும் பிரச்சினையாக மாறுகின்றன. கோபம், கவலை, வெறுப்பு, மனச்சோர்வு, சங்ஙடம் போன்ற உணர்வுகள் நம் மன அமைதியை மட்டுமல்ல; உடல்நலனையும் பாதிக்கத் தொடங்குகின்றன.
உளவியலாளர்கள் கூறும் ஒரு சுவாரஸ்யமான கருத்து என்னவென்றால், வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் வெறும் 10% மட்டுமே. ஆனால், அவற்றிற்கு நாம் அளிக்கும் எதிர்வினைகள்தான் மீதமுள்ள 90% பாதிப்பை உருவாக்குகின்றன.
அப்படியானால், அந்த எதிர்வினையை எப்படி கட்டுப்படுத்துவது?
அதற்கு உதவும் ஒரு எளிய உளவியல் நடைமுறைதான் Pause – Assess – Reframe.
Pause – முதலில், ஒரு பிரச்சினை ஏற்பட்டவுடன் உடனே எதிர்வினையாற்ற வேண்டாம். மனதை ஒரு கணம் நிறுத்துங்கள். ஆழமாக மூச்சை இழுத்து, சிறிது நேரம் அமைதியாக இருங்கள்.
Assess – அடுத்ததாக, உங்கள் உணர்ச்சியை ஆராயுங்கள். "நான் இப்போது ஏன் கோபப்படுகிறேன்?", "இந்தச் சம்பவம் உண்மையிலேயே இவ்வளவு பெரியதா?", "என் உணர்ச்சி சரியானதா?" என்று உங்களையே கேள்வி கேளுங்கள்.
Reframe – இறுதியாக, அந்தச் சம்பவத்தை வேறு கோணத்தில் பார்க்க முயற்சி செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்களை நேர்மறையான சிந்தனைகளாக மாற்றுங்கள். சூழ்நிலையை மாற்ற முடியாவிட்டாலும், அதைப் பார்க்கும் பார்வையை மாற்ற முடியும்.
இந்த மூன்று சிறிய படிகள் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கவும், உறவுகளைப் பாதுகாக்கவும், குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு மனக்கசப்புகளை பெரிதாகாமல் தடுக்கவும் இவை உதவும்.
நம் வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளையும் தவிர்க்க முடியாது. ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் விதத்தை மாற்ற முடியும். அந்த மாற்றமே மாற்றத்தின் முதல் படி.
Pause – Assess – Reframe
இந்த மூன்று கொள்கைகளையும் தினசரி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். மனசுமை குறையும், மனநிம்மதி அதிகரிக்கும். வாழ்க்கை என்றே இலகுவாகத் தோன்றும்.
முடிந்தால், இன்றே முயற்சி செய்து பாருங்கள். உங்கள் மனதிற்கும், அதற்குத் தேவையான உளவியல் உணவை வழங்கத் தொடங்குங்கள்.
அகிலாண்டேஸ்வரி
ஆசிரியர் / வெளியீட்டாளர்
அவள் அரண்