1. POCSO சட்டம் என்றால் என்ன? இந்தச் சட்டம் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கிறது?
POCSO என்பது Protection of Children from Sexual Offences Act, 2012. 18 வயதிற்குக் குறைவான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை மற்றும் குழந்தைகளை ஆபாசப் பொருட்களுக்காகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சிறப்புச் சட்டமாகும். குழந்தைக்கு உகந்த முறையில் புகார், விசாரணை மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் நடைபெறுவதற்கும் இந்தச் சட்டம் பல்வேறு பாதுகாப்புகளை வழங்குகிறது.
2. POCSO சட்டத்தின்படி “குழந்தை” என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள்?
POCSO சட்டத்தின் Section 2(d) படி, 18 வயது நிறைவடையாத எந்த நபரும் “Child”
எனக் கருதப்படுகிறார்.
3. குழந்தைகளுக்கு எதிரான எந்தெந்த செயல்கள் POCSO சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றன?
Penetrative Sexual Assault, Sexual Assault, Sexual Harassment மற்றும் குழந்தையை ஆபாசப் பொருட்களுக்காகப் பயன்படுத்துதல் போன்றவை முக்கியமான குற்றங்களாகும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனையும் மாறுபடும்.
4. ஒரு குழந்தை தனக்கு நடந்த தவறான சம்பவத்தை பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் கூறினால், முதலில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலில் குழந்தையை நம்ப வேண்டும்; பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும்; குற்றம் சாட்டப்படும் நபரிடமிருந்து குழந்தையைப் பாதுகாக்க வேண்டும். பின்னர் சட்டப்படி உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். குழந்தையை மீண்டும் அந்தச் சூழ்நிலைக்கு அனுப்பக்கூடாது.
5. குழந்தை ஒரு பாலியல் குற்றம் குறித்து தெரிவித்தால், அவர்களிடம் எப்படிப் பேச வேண்டும்?
எவற்றைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்? அமைதியாகக் கேட்டு, “நீ சொன்னது
தவறு அல்ல; நான் உன்னை நம்புகிறேன்; உன்னை பாதுகாப்பேன்” என்று உறுதியளிக்க வேண்டும். “ஏன் அங்கே சென்றாய்?”, “ஏன் எதிர்த்து பேசவில்லை?”, “இதற்கு முன்பும் நடந்ததா?” போன்ற குற்றம் சாட்டுவது போல அல்லது குழந்தையை குற்ற உணர்வுக்குள்ளாக்கும் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். குழந்தையிடம் மீண்டும் மீண்டும் விவரங்களை விசாரிப்பதைவிட, உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதே முக்கியம்.
6. POCSO தொடர்பான சம்பவம் தெரியவந்தால் புகார் அளிப்பது கட்டாயமா?
ஆம். POCSO Act-ன் Section 19 கீழ், ஒரு POCSO குற்றம் நடைபெற்றிருக்கலாம் என்று தெரிந்தாலோ அல்லது அத்தகைய குற்றம் நடைபெறக்கூடும் என்ற அச்சம் இருந்தாலோ, அதை உரிய காவல் அதிகாரி அல்லது Special Juvenile Police Unit-க்கு தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.
7. குழந்தைக்கு நடந்த சம்பவத்தை அறிந்தும் புகார் அளிக்காமல் இருந்தால் சட்டரீதியான விளைவுகள் என்ன?
Section 21-ன் கீழ், புகார் அல்லது தகவலைத் தெரிவிக்கத் தவறுவது குற்றமாக இருக்கலாம். சூழ்நிலையைப் பொறுத்து தண்டனை விதிக்கப்படலாம். குறிப்பாக
நிறுவனங்கள் அல்லது பொறுப்பில் உள்ள நபர்களுக்கு சட்டம் கடுமையான கடமைகளை விதிக்கிறது.
8. குற்றம் செய்ததாகக் கூறப்படும் நபர் உறவினர், ஆசிரியர் அல்லது நன்கு அறிமுகமான நபராக இருந்தாலும் புகார் அளிக்க முடியுமா?
முடியும். அந்த நபர் யார் என்பது சட்டத்தின் பாதுகாப்பை நீக்காது. உறவினர்,
ஆசிரியர், நண்பர், அண்டை வீட்டார் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமானவர் என
யாராக இருந்தாலும், குழந்தைக்கு எதிரான POCSO குற்றம் குறித்த தகவல் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
9. பள்ளிகளில் POCSO விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக என்னென்ன நடைமுறைகள் இருக்க வேண்டும்?
பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை, POCSO விழிப்புணர்வு,
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி, புகார் தெரிவிக்கும் பாதுகாப்பான நடைமுறை, குழந்தைகளுக்கான awareness programmes மற்றும் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்.
“ஒரு குழந்தை தன்னிடம் நடந்த தவறை தைரியமாகச் சொல்லும்போது, அந்தக் குழந்தையை நம்பி பாதுகாப்பதற்காக ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் என்ன?”
முதல் — நம்புங்கள். குழந்தை சொல்வதை உடனடியாக மறுக்கவோ, சந்தேகிக்கவோ வேண்டாம்.
இரண்டாவது — குற்றம் சாட்டாதீர்கள். “நீ ஏன் அங்கே சென்றாய்?”, “ஏன் முன்னதாக
சொல்லவில்லை?” என்று குழந்தையையே குற்றவாளியாக்கும் கேள்விகளைக் கேட்காமல், பாதுகாப்பும் ஆதரவும் கொடுக்க வேண்டும்.
மூன்றாவது — நடவடிக்கை எடுங்கள். குழந்தையைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, தகவலை சட்டப்படி காவல்துறை/SJPU போன்ற உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். குழந்தையின் குரலைக் கேட்பது மட்டும் போதாது; அந்தக் குரலுக்கு சட்டத்தின் பாதுகாப்பை வழங்குவதுதான் பெரியவர்களின் பொறுப்பு.
பள்ளி நிர்வாகம் சட்டத்தின் கீழான reporting obligations-ஐ முறையாகப் பின்பற்ற வேண்டும். குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், பள்ளி போன்ற விவரங்களை வெளிப்படுத்தி குழந்தையை அடையாளம் காணக்கூடிய வகையில் ஊடகங்களில் வெளியிடுவது சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது, சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விதிவிலக்குகளைத் தவிர.
10. Good Touch – Bad Touch பற்றி குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து, எவ்வாறு புரிய
வைக்கலாம்?
இதற்கு ஒரு குறிப்பிட்ட வயதை எதிர்பார்க்க வேண்டியதில்லை. குழந்தைக்கு
புரியும் அளவிலான மொழியில் சிறு வயதிலிருந்தே body safety பற்றி கற்றுக்கொடுக்கலாம்.
“உன் உடல் உனக்குச் சொந்தம்”,
“உனக்கு அசௌகரியமாக இருந்தால் NO என்று சொல்லலாம்”,
“நம்பிக்கைக்குரிய ெரியவரிடம் உடனே சொல்ல வேண்டும்”
போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
11. Online Grooming, தவறான Chat, Photo/ Video பகிர்வு, Social Media தொடர்புகள் போன்ற
இணையவழி பிரச்சினைகளுக்கு POCSO சட்டம் எவ்வாறு பொருந்துகிறது?
குழந்தையை பாலியல் நோக்கத்துடன் அணுகுதல், பாலியல் தொல்லை
அளித்தல், குழந்தையை pornographyக்கு பயன்படுத்துதல் அல்லது பாலியல்
நோக்கத்துடன் புகைப்படம்/வீடியோவை உருவாக்குதல் அல்லது பரப்புதல் போன்ற செயல்கள் சூழ்நிலையைப் பொறுத்து POCSO மற்றும் பிற பொருந்தக்கூடிய cyber laws கீழ் குற்றமாகலாம். எனவே online interaction என்பதால் அது சட்டத்திற்கு வெளியானது என்று கருத முடியாது.
12. குழந்தையின் புகைப்படம் அல்லது வீடியோவை தவறான நோக்கத்துடன் எடுப்பது அல்லது பகிர்வது குற்றமாகுமா?
ஆம், புகைப்படம் அல்லது வீடியோவின் தன்மை, எடுக்கப்பட்ட நோக்கம் மற்றும்
பயன்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றைப் பொறுத்து POCSO சட்டத்தின் கீழ் குற்றமாக இருக்கலாம். குறிப்பாக குழந்தையை sexual/ explicit material-ல் பயன்படுத்துவது மிகவும் தீவிரமான குற்றமாகும். அதை forward செய்வதும் சட்டரீதியான பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
13. ஒரு குழந்தை மற்றொரு குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் வந்தால் சட்டம் அதை எவ்வாறு அணுகுகிறது?
POCSO-வில் இருவரும் 18 வயதிற்குக் குறைவானவர்கள் என்றால், சம்பவத்தின்
தன்மை மற்றும் வயது போன்ற காரணிகள் முக்கியம். சட்டம் குழந்தையை adult accused போல நடத்துவதில்லை. குழந்தை conflict with law என்ற நிலைக்கு வந்தால், Juvenile Justice Act உட்பட பொருந்தக்கூடிய சட்ட நடைமுறைகளும் கவனத்தில் கொள்ளப்படும். குழந்தை victim ஆக இருந்தால் அவனது/ அவளது பாதுகாப்பும் முதன்மையாக இருக்கும்.
14. POCSO புகார் அளித்த பிறகு குழந்தையின் அடையாளம் மற்றும் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?
POCSO Act-ன் Section 23 குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கிறது.
15. குழந்தை பயப்படாமல் நடந்ததை தெரிவிக்க பெற்றோர் வீட்டில் எப்படிப்பட்ட பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்?
குழந்தை சொல்வதை இடைமறிக்காமல் கேட்பது, உடனடியாகக் கோபப்படாமல்
இருப்பது, குழந்தையை குற்றம் சாட்டாமல் இருப்பது மற்றும் “எதுவாக இருந்தாலும்
என்னிடம் சொல்லலாம்” என்ற நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் முக்கியம். பயம் இல்லாத communication தான் குழந்தையின் முதல் பாதுகாப்பு.
16. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தனிப்பட்ட உடல் பாதுகாப்பு (Body Safety) பற்றி என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்?
தனிப்பட்ட உடல் உறுப்புகள், privacy, consent, uncomfortable touch-ஐ மறுப்பது,
பாதுகாப்பான பெரியவரிடம் உடனடியாகச் சொல்லுவது, secrets மற்றும் unsafe
requests குறித்து எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். Online safety-யும் இதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
17. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன?
இது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல. பெற்றோர் பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்க வேண்டும்; ஆசிரியர்கள் குழந்தைகளின் பாதுகாப்பையும் சட்டப்பூர்வ reporting duties-ஐயும் கவனிக்க வேண்டும்; சமூகம் குழந்தையை குற்றம் சாட்டாமல் பாதுகாக்க வேண்டும். சந்தேகமான சம்பவங்களை மறைப்பதற்குப் பதிலாக சட்டப்படி உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதே சரியான அணுகுமுறை.
POCSO தொடர்பான பிரச்சினையில் உதவி தேவைப்பட்டால் யாரை அணுக வேண்டும்? புகார் அளிப்பதற்கான சரியான நடைமுறை என்ன?
காவல் நிலையம் அல்லது Special Juvenile Police Unit (SJPU)-ஐ அணுகலாம். அவசரநிலையில் 112 மற்றும் குழந்தைகள் உதவி எண்ணான 1098-ஐ அணுகலாம்.
தகவல் கிடைத்தவுடன் சட்டப்படி புகார் பதிவு செய்து, குழந்தையின் பாதுகாப்பு, மருத்துவ உதவி, தேவையான support services மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் குழந்தைக்கு உகந்த முறையில் நடைபெற வேண்டும்.