"ஒரு பெண் முன்னேறினால், ஒரு குடும்பம் முன்னேறும்" என்ற உயரிய எண்ணத்தோடும் தன்னலமற்ற பணியிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு அகாடமி. கல்வி, தொழில் திறன், தன்னம்பிக்கை, பொருளாதார சுதந்திரம் என பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி, இதுவரை 8,000க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
வீட்டுப் பொறுப்புகளைச் சுமந்தபடியே கல்வி கற்கவும், சொந்தமாகத் தொழில் தொடங்கி வருமானம் ஈட்டவும் பெண்களுக்கு வழிகாட்டும் இந்த அகாடமி, தொழில் கல்வியையும் வாழ்க்கைத் திறன்களையும் இணைத்து வழங்கி வருகிறது.
கற்றலிலிருந்து தொழில்முனைவு வரை...
மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி, குழந்தைகள் உளவியல், சிறப்புக்கல்வி, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல், யோகா, அபாகஸ், வேதிக் கணிதம், தமிழ் மற்றும் ஆங்கில ஒலிப்பியல், ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சிகள் வெறும் சான்றிதழ் பெறுவதற்காக மட்டுமல்ல; பெண்கள் தங்கள் திறமையைத் தொழிலாக மாற்றி, சுயநிறைவு அடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
இருமுறை உலக சாதனை படைத்த பெருமை
கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு தன் பலனாக, இருமுறை உலக சாதனை படைத்த நிறுவனமாக ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு அகாடமி திகழ்கிறது.
மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட கல்வி சார்ந்த உலக சாதனை நிகழ்வுகள், சமூகப் பொறுப்புடன் செயல்படும் இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
50 நாட்கள்... 50 திறன்கள்... புதிய வாழ்க்கைக்கான 20 வாய்ப்புகள்!
பெண்கள் சுயமதிப்பீடே தொழில் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் "50 நாட்கள் – 50 திறன்கள்" திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உணவுப் பொருட்கள் தயாரித்தல், கைவினைப் பொருட்கள், அழகுக்கலை, ஆடை வடிவமைப்பு, ஆசிரியர் பயிற்சி, குழந்தைகள் திறன் மேம்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வீட்டு வணிக மேலாண்மை என பல்வேறு திறன்கள் இதில் கற்றுத்தரப்படுகின்றன.
அதோடு, தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி? சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை எவ்வாறு சென்றடைவது? விலை நிர்ணயம் செய்வது எப்படி? போன்ற தொழில்முனைவு சார்ந்த நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு உதவிகரமாக 2 பிரத்யேக தொழில் வழிகாட்டி நூல்களையும் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
சிறப்புக் குழந்தைகளுக்கான சேவையில் சிறப்புப் பயிற்சி
ஆட்டிசம், ADHD, டிஸ்லெக்ஸியா, கற்றல் குறைபாடு உள்ளிட்ட சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ளவர்களுக்குச் சிறப்பு கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திட்டங்களும் நடத்தப்படுகின்றன.
இந்தப் பயிற்சிகள் மூலம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறப்புக் கல்வியாளர்கள் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் வளர்ச்சிக்குச் சிறந்த வழிகாட்டிகளாக மாறுகின்றனர்.